ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று விதி இல்லை என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது அதிமுகவின் விதி மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டால் பொதுக்குழுவை கூட்டலாம் எனவும், வைத்தியலிங்கம் தேவையற்ற வார்த்தைகளை ரவுடித்தனமாக பேசியுள்ளார் என்றும், நேற்று நடந்த பொதுக்குழுவுக்கு, ஓ.பி.எஸ் கையெழுத்தோடு அழைப்பு கொடுக்கப்பட்டது. தான் கையெழுத்தே போடவில்லை என்கிறாரா?
உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு பஞ்சாயத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை; தேர்தல் ஆணையத்திற்கு தான் உண்டு என்றும் மேலும், சி.வி.சண்சண்முகம் தெரிவித்தார்.
ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம், அதை ஏற்றுக்கொள்வோம்; அவர் பொறுப்புகளை அறிவித்தால், அடுத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவார். தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை வழிமொழிகிறேன் என பன்னீர் செல்வமே மேடையில் சொன்னார்தானே.
கழக சட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது
கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திய பன்னீர் செல்வத்தை மன்னித்துதான் ஏற்றோம், அவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று மேலுள்ள விதிகளில் முன்னர் திருத்தம் செய்யப்பட்டது என்றும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.