தமிழகம் முழுவதும் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று முதல் ஆரம்பமாகிறது. இது, வரும் 28-ம் தேதி வரை இது நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், வருகின்ற 24-ம் தேதி வரை அனல் காற்று வீசும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பகல் நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களை தவிர வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வெப்பத்தை தணிக்க இளநீர், மோர் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்துவது நல்லது என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.