அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சிகளும் வெளியிடவுள்ளன.
இது தொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: 2026-ல் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, இந்த மக்களவைத் தேர்தலில் மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்தால்தான் சரியாக இருக்கும். அதனால் தான் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறோம்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன.
இந்த முறை தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் (தனி ), விழுப்புரம் (தனி), சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு தெரிவித்தனர்.