ராஜேஷ் என்ற மனிதரின்
பெளதிக உடலுக்கு
மூன்று மரணங்கள்
நேர்ந்திருக்கின்றன
ஒரு கலைஞன்
ஒரு முற்போக்குச் சிந்தனையாளன்
ஓர் எழுத்தாளன் என்ற
மூன்று இழப்புகள்
ஒரே நேரத்தில் நேர்ந்துவிட்டன
கலை உலகம்
அரசியல் உலகம்
அறிவுலகம் குறித்த
தீர்க்கமான சிந்தனையாளர்
திடீரென்று மறைந்துவிட்டார்
என் அன்னையின் மறைவுக்கு
இரங்கல் தெரிவிக்க
10 நாட்களுக்கு முன்பு
வந்துசென்றவர்க்கு
இன்று நானே
இரங்கல் செய்தி சொல்வது
சுமக்க முடியாத துக்கமாகும்
மரணம்
இயற்கையெனினும்
இயல்பாக எடுத்துக்கொள்ள
இயலவில்லை
அவரது உயிர்
கலையமைதி கொள்ளட்டும்
ஆழ்ந்த இரங்கல்
அனைவருக்கும்
.
நடிகர் ராஜேஷ் மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல்!

.