மோட்டார் சைக்கிள் மைலேஜ் எப்படி கண்டுபிடிப்பது?

bike-mileage-news
மோட்டார் சைக்கிள் மைலேஜ் எப்படி கண்டுபிடிப்பது?

ஆண்கள் ஓட்டும் படியான இருசக்கர வாகனங்களான பைக்குகளாக இருந்தால் பெட்ரோல் அளவு மெயினில் இருக்குமாறு பெட்ரோல் போட்டுகொண்டு வாகனத்தை இயக்கவும். எப்போது எரிபொருள் சிறிது தீர்ந்து மெயினில் இருந்து ரிசர்வுக்கு மாறுகின்றதோ அப்போது கிலோமீட்டர் அளவை குறித்து கொள்ளவும் .

பின்னர் சரியாக ஒருலிட்டர் பெட்ரோல் மட்டும் போடவும் .மீண்டும் பெட்ரோல் காக்கை மெயினுக்கு திருப்பிவிடவும். அடுத்து எப்போது எரிபொருள் குறைந்து மெயினிலிருந்து ரிசர்வுக்கு மாறுகின்றதோ அப்போது மீண்டும் கிலோமீட்டரை குறித்துக்கொள்ளவும்.

இரண்டாவது கிலோமீட்டர் அளவிலிருந்து முதலாவது கிலோமீட்டர் அளவை கழித்தால் உங்கள் வாகனத்தின் மைலேஜ்!

இதுவே ஸ்கூட்டர் மாதிரியான வாகனங்களில் பெட்ரோல் திறந்து மூடும் வால்வ் இருக்காது .அதுபோன்ற வாகனங்களில் நீங்கள் மைலேஜ் பரிசோதிக்க விரும்பினால் அரை லிட்டர் பெட்ரோலை ஒரு லிட்டர் பாட்டிலில் வாங்கிக்கொள்ளுங்கள். அதனை துணி அல்லது சாக்கு சுற்றி வாகனத்திலேயே வைத்திருங்கள்.

வாகனம் எப்போது முழு எரிபொருளும் தீர்ந்து நிற்கின்றதோ அப்போது கிலோமீட்டர் குறித்துக்கொண்டு அரை லிட்டர் பெட்ரோலை வாகனத்தில் நிரப்புங்கள். அடுத்து வரும் பெட்ரோல் பம்பில் உடனடியாக மீண்டும் அரை லிட்டர் பெட்ரோலை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் பாதுகாப்புக்காக. இப்போது ஊற்றிய அரைலிட்டர் பெட்ரோல் எப்போது தீர்ந்து வாகனம் நிற்கின்றதோ அப்போது ஒரு கணக்கெடுப்பு.இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை இரண்டால் பெருக்கினால் உங்கள் வாகனத்தின் மைலேஜ்

பின்னர் உடனே வாங்கி வைத்துள்ள பெட்ரோலை ஊற்றி பயணத்தை தொடருங்கள். மைலேஜ் பரிசோதனையின் போது செய்ய வேண்டியவையும், செய்ய கூடாதவையும் .

1.அதிகமான ஆன் /ஆப் இருக்க கூடாது.

2.சீரான வேகத்திலேயே இயக்க வேண்டும் .40 /50 km /hour.

3 அடிக்கடி பிரேக் பிடித்தல் கூடாது.

4 அடிக்கடி கியர் மாற்றுதலும் கூடாது.

5.டயரில் காற்றின் அளவு சரியாக இருக்க வேண்டும்.

6 .வாகனத்தின் சாரதி மட்டுமே அனுமதி !இருவர் ,மூவர் தவிர்க்கவேண்டும்

7.சீரற்ற சாலைகளும் ,மலையேற்றங்களும் மைலேஜ் சோதனைக்கு உகந்ததல்ல.

8.வாகனத்தின் முகப்பு விளக்கு போடக்கூடாது.

9.சோக் உபயோகிக்கக்கூடாது.

10 .வேகமெடுத்து நியூட்ரல் செய்தும் ,வேகமெடுத்து கிளட்ச் பிடித்தும் ,பெட்ரோல் சிக்கனமென முயற்சி செய்யக்கூடாது.

இவ்வாறு கணக்கிடப்படும் வாகன மைலேஜ் தோராயமாக ஐந்து சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ கணக்கிட்டு கொள்ளவேண்டும்.

உதாரணமாக 50 கிலோமீட்டர் என்றால் 48/52 என்ற அளவில் மைலேஜ் என்று கொள்ள வேண்டும் .

முக்கியமாக ஹெல்மெட் அணிந்து வாகனம் இயக்க வேண்டும்.