அயோத்தி ராமர் கோவிலின் வரலாறு!
முதலாம் பானிபட் யுத்தம் 1526ம் ஆண்டு லோடி பேரரசுக்கும் பாபருக்கும் நடைபெற்றது.
இதில் பாபர் வெற்றி பெறுகிறான்.
அதைத் தொடர்ந்து கிழக்கு இந்தியா முழுவதையும் பாபர் கைப்பற்றி விடுகிறான்.
1528ம் ஆண்டு அயோத்தி வழியாக திரும்பிய பாபர் அங்கு வற்றாது ஓடும் சரயு நதிக்கரையில் ஒய்வெடுத்தான்.
சரயு நதியின் அழகும் கம்பீரமும் அதில் தவழ்ந்து வந்த தென்றலும் பாபரை மிகவும் கவர்ந்தது.
உடனே அதன் கரையில் ஒரு மசூதி கட்டவேண்டும் என்று திட்டமிட்டான்.
அதற்கான ஆணையையும் தனது தளபதி மீர்பாஹியிடம் கூறுகிறான்.
ஏற்கெனவே அங்கிருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டிவிடலாம் என்று மீர்பாஹி போட்ட கணக்கு அவ்வளவு எளிதில் கைகூடவில்லை.
மன்னர் ராஜா மெகதீர் சிங், தேவேந்திர பாண்டே, ராணி ஜெயராஜ் கன்வர் என்பவர்களுடன் சேர்த்து பத்துக்கும் மேற்பட்ட போரை ராமர் கோயிலுக்காக மேற்கொள்ள வேண்டியிருந்தது.
மன்னர் தேவேந்திரா பாண்டே 17 நாட்கள் மீர்பாஹியின் பெரும்படையை எதிர்த்து நின்று களத்தில் போராடினார்.
அதையும் தாண்டி ராணி ஜெயராஜ் கன்வர் ஒரு படி மேலே போய் தன்னுடன் ஐயாயிரம் (பெண்களை) வீராங்கனைகளைக் கொண்ட படையுடன் போரிட்டார்.
இப்படி அயோத்தியில் பிறந்த ஒவ்வொருவரும் வீரராகவோ வீராங்கனையாகவோ மாறுவதைக் கண்ட பாபரின் படை இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், எதிர்ப்பவர்களை பயமுறுத்த வேணடும் என்பதற்காக சிறைப்பிடிக்க வாய்ப்பு இருந்தும் அப்படிச் செய்யாமல் ராணியை போர்க்களத்தில் தலையை வெட்டிக் கொன்றனர்.
மீர்பாஹியின் பீரங்கி மற்றும் துப்பாக்கி படையை பழங்கால வேல் வாள் போன்ற ஆயுதங்களுடன் எதிர்கொள்ள முடியாத நம் வீரர்கள் பல ஆயிரக்கணக்கில் பலியாகினர்.
இப்படி ராமர் கோயிலை கைப்பற்ற வருகிறார்கள் கோயிலை சிதைத்துவிடுவார்கள் என்பதை உணர்ந்த அக்கோயில் அர்ச்சகராக இருந்த பாபா ராம்தேவ் என்பவர் கர்ப்பகிரகத்தில் இருந்த குழந்தை ராமர் சிலையை எடுத்துக் கொண்டு தலைமறைவானார்.
இதை அறிந்த மீர்பாஹி சல்லடை போட்டு அர்ச்சகரையும் அவர் எடுத்துச் சென்ற ராமர் விக்ரகத்தையும் தேடினான்.
ஆனாலல் கடைசி வரை இருவருமே அவனது கையில் கிடைக்கவில்லை.
நீண்ட காலம் கழித்து மலைக்குன்றில் இருந்த குழந்தை ராமர் சிலை மட்டும் மீட்கப்பட்டது.
அதுதான் இன்று வரை ராமர் கோயிலில் ராம் லல்லாவாக வழிபடப்படுகிறது.
ஒரு சிறு கோயில்தானே போனால் போகட்டும் என்று விட்டுக் கொடுத்திருந்தால் அவர்களது உயிர் போயிருக்காது.
மாறாக பாபரின் ஆசியும் பொன்னும் பொருளும் கூட பரிசாகக் கிடைத்திருக்கும்.
ஆனால் தங்களது உயிரை விட ராமர் கோயிலே உயர்ந்தது என்ற எணணம் கொண்டிருந்ததால் களத்தில் பலியாவோம் எனத் தெரிந்தே எதிர்த்து நின்று உயிரை விட்டனர்.
இவர்களின் இரத்தத்தின் மீது நடந்து சென்றுதான் மீர்பாஹி ராமர் கோயிலை கைப்பற்ற முடிந்தது.
கோயில் தகர்க்கப்பட்டு மன்னரின் விருப்பப்படி அங்கு மசூதியும் கட்டப்பட்டது. அதுவே பாபர் மசூதியானது.
ஜெய் ஸ்ரீ ராம்