டப்பிங் சங்கத்திற்கு ராதாரவி மீண்டும் தலைவாரக தேர்வு

radharavi-is-again-the-head-of-the-dubbing-association
டப்பிங் சங்கத்திற்கு ராதாரவி மீண்டும் தலைவாரக தேர்வு

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு 2024 முதல் 2026 ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது.

 

இதில் சங்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்காக போட்டியிட்டார்.

 

அதே தலைவர் பதவிக்கு ராஜேந்திரன், சற்குணராஜ் ஆகியோரும் போட்டியிட்டனர்

 

தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தம் 1,021 வாக்குகள் பதிவாகின. அதில் 662 வாக்குகள் பெற்ற ராதாரவி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.