தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள்  - எடப்பாடி பழனிசாமி பேட்டி

antisocials-in-head-office-edappadi-palaniswami-interview
Antisocials in Head Office - Edappadi Palaniswami interview

அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்தது குறித்து காவல்துறையில் புகார் அளித்தோம்; எனினும், பாதுகாப்பு வழங்கப்படவில்லை - எடப்பாடி பழனிசாமி பேட்டி.

அதிமுக தலைமை அலுவலத்தில் ரவுடிகளை அழைத்து வந்து, கட்சிக்காரர்களை ஓ.பி.எஸ். தாக்கிய சம்பவம் வேதனை அளிக்கிறது இவரையெல்லாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஆக்கியதற்கு தக்க வெகுமதியை தந்திருக்கிறார்.

நீங்கள் இன்று கொடூரமாக அடித்து, தாக்கிய கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் உங்களை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது 
பொதுக்குழுவில் அவருக்கு மேடையில் நாற்காலி போடப்பட்டது; ஆனால், அவர் வரவில்லை.

காவல்துறையினர் எங்களது ஆதரவாளர்களைத் தாக்கினரே தவிர, ஓ.பி.எஸ் அழைத்து வந்த ரவுடியினரை தடுக்கவில்லை ஓ.பி.எஸ். ஒரு சுயநலவாதி என்பதை மீண்டும் காட்டியுள்ளார். தனக்கு கிடைக்காத பதவி, எவருக்கும் கிடைக்கக் கூடாது என்று சுயநலமாக செயல்படக்கூடியவர்தான் ஓ.பி.எஸ்  என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.