சென்னை மெட்ரோ ரயில்களில் நடப்பு ஆண்டு செப்டம்பரில் 84,37,182 பயணிகள் பயணித்த நிலையில், அக்டோபரில் இதை விட 1.13 லட்சம் பயணிகள் அதிகமாக 85,50,030 போ் பயணித்து இருந்தனர். இந்நிலையில் நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சம் பேர் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக நவ.10 ஆம் தேதி 3.35 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ‘க்யுஆா்’ குறியீடு, பயண அட்டைகள், மற்றும் இணையவழி பயணச்சீட்டுகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
மேலும் 83000 - 86000 என்ற எண்ணை பயன்படுத்தி வாட்ஸ் - அப் மூலம் அல்லது இணைய பணப்பரிமாற்று செயலிகள் மூலம் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.