மகர சங்கராந்தி தினத்தில் கங்கையில் புனித நீராட பக்தர்களுக்கு தடை

haridwar-bans-holy-dip-in-ganga
Haridwar bans holy dip in Ganga

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது. இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், மகர சங்கராந்தி அன்று கங்கை நதியில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என ஹரித்வார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி அன்று கங்கை நதியில் புனித நீராடலுக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags