மாணவ மாணவிகளுக்கு போக்சோ விழிப்புணர்வு

pocso-awareness-for-undergraduate-students
Pocso awareness for undergraduate students

திருமங்கலம் பகுதியில்  சுமார் 500 பள்ளி மாணவ மாணவிகளுக்கு போக்சோ உள்ளிட்ட  குழந்தைகள் நல பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், 20.12.2021 அன்று மதியம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புபிரிவு (CAWC) காவல் துணை ஆணையாளர் திருமதி.ஷியமளாதேவி, அவர்கள் தலைமையில் காவல் குழுவினர் திருமங்கலம், Leo Academy of Excellence மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500 மாணவ மாணவிகளுக்கு போக்சோ சட்டம், குழந்தைத் திருமண தடைச்சட்டம், குழந்தை தொழிலாளர் முறை தடுப்புச் சட்டம், கல்வி உரிமைச்சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும், அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி மைய எண்கள் 1098, 14417, 100, 1091, 181 மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

#chennaipolice 
#greaterchennaipolice 
#chennaicitypolice
#shankarjiwalips

Tags