கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆராய்ச்சி மையம்

chance-of-heavy-rain-chennai-meteorological-research-center
Chance of Heavy Rain - Chennai Meteorological Research Center

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மதுரை, ராமநாதபுரம் கடலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், தூத்துக்குடி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல்  ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், மற்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்குள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என்றும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.