புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கு இ-பதிவு!

e-registration-for-wedding-with-new-conditions
E-Registration For Wedding With New Conditions!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாவட்டங்களுக்கு உள்ளேயும் இ- பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ- பதிவிற்காக  https://eregister.tnega.org/#/user/pass என்ற இணைய தளத்தைப் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது தமிழக அரசு.

இந்த இணைய தளத்தில் புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கான இ- பதிவு முறை மீண்டும் சேர்க்கப்பட்டது.

இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், "திருமண நிகழ்விற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும். ஒரே பதிவிலேயே அனைத்து வாகனங்களுக்கும் இ- பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது. மணமகன், மணமகள், தாய், தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ- பதிவை மேற்கொள்ளலாம். விண்ணப்பத்தாரரின் பெயர் (மணமகன், மணமகள், தாய், தந்தை) திருமண அழைப்பிதழில் இருக்க வேண்டும். இ- பதிவின் போது திருமண அழைப்பிதழை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறான தகவல், ஒரு நிகழ்வுக்கு அதிகமுறை இ- பதிவு செய்தால் சிவில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வாகனங்களின் எண்கள், ஓட்டுநர் பெயர், செல்போன் எண், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் அவசியம் ஆகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.