மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்த சிறப்பு ஏற்பாடு!

special-arrangement-for-disabled-people-to-pay-for-the-vaccine
Special arrangement for disabled people to pay for the vaccine!

மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் தடுப்பூசிச் செலுத்த சிறப்பு ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிப் பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்.

அனைத்து  தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லாது மாற்றுத்திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுத் தளம் அமைக்கப்பட வேண்டும்.

தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்பட வேண்டும்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.