OBC மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இல்லை - மத்திய அரசு

there-is-no-50-per-cent-reservation-for-obc-students-central-government-of-india
Central Government of India

மருத்துவ மேற்படிப்புகளில் OBC மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்பில் OBC மாணவர்களுக்கு  50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காலம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு மனுதாரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மருத்துவப் படிப்புகளில் OBC பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வரலாம் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.