Breaking News :

Wednesday, June 19
.

விவசாயிகள் மீது குண்டாஸ்... தமிழக அரசுக்கு தலைவர்கள் கண்டனம்!


திருவண்ணாமலையில் சிப்காட்-க்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய விவசாயிகள் ஏழு பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. இதனால் பொது மக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதியில் சிப்காட் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு சிப்காட் அமைக்க விவசாயிகள், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விளைநிலங்களை அழித்த சிப்காட் அமைக்க 11 கிராமங்களைச் சார்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த சிப்காட் அமைக்க 11 கிராமங்களில் 3174 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் பச்சையப்பன், மாசிலாமணி, பாக்கிய ராஜ், சோழன், திருமால், அருள், தேவன் ஆகிய 7 பேர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


தமிழ்நாடு அரசின் இந்த அராஜக போக்குக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரன் உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து, அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.