கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் காலமானார்!
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து , “என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இச்சூழலில் முதன் முதலாய் அம்மாவுக்கு - வைரமுத்து தன் தாய்க்கு எழுதிய கவிதை அஞ்சலி
ஆயிரம் தான் கவி சொன்னே
அழகா அழகா பொய் சொன்னே
பெத்தவளே உன் பெரும
ஒத்தவரி சொல்லலியே .
காத்தெல்லாம் மகன் பாட்டு
காகிதத்தில் அவன் எழுத்து
உரெல்லாம் மகன் பேச்சு
உன்கீர்த்தி எழுதலயே .
எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பத்தி
எழுதி என்ன லாபமென்னு எழுதாம போனேனோ
பொன்னையா தேவன் பெத்த பொன்னே குல மகளே
என்னை பொரம் தள்ள இடுப்பு வலி பொறுத்தவளே .
வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில் நீ சுமந்ததில்ல
வயித்தில் நீ சுமந்த ஒன்னு
வைரமுத்தா ஆயிருச்சி .
கண்ணு காது முக்கோட கருப்பா
ஒரு பிண்டம்
இடப்பக்கம் கெடகையில
என்ன என்ன நெனச்சிருப்ப .
கத்தி எடுப்பவனோ
களவான பிறந்தவனோ
தரணி ஆல வந்திருக்கும்
தாசில்தார் இவன் தானோ .
இந்த விவரங்கள்
எது ஒன்னும் தெரியாம
நெஞ்சூட்டி வளத்த உன்ன
நெனச்சா அழுக வரும் .
கத கதன்னு கலி கிண்டி
களிக்குள்ள குழி வெட்டி
கருப்பட்டி நல்லண்ண
கலந்து தருவாயே .
தொண்டைல அது இறங்கும்
சுகமான இளம் சூடு
மண்டையில இன்னும்
மச மசன்னு நிக்குதம்மா .
கொத்தமல்லி வருத்து வச்சு
குருமுளகா ரெண்டு வச்சு
சீரகமும் சிருமிலகும்
சேர்த்துவச்சு நீர் தெளிச்சு .
கும்மி அரச்சு
நீ கொழ கொழன்னு வழிக்கையில
அம்மி மணக்கும்
அடுத்த தெரு மணமணக்கும் .
தித்திக்க சமச்சாலும்
திட்டிகிட்டே சமச்சாலும்
கத்திரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேன் ஒழுகும் .
கோழி கொழம்பு மேல
குட்டி குட்டியா மிதக்கும்
தேங்கா சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சி ஊரும் .
வருமையில நாம பட்டா
வலி தாங்க மாட்டன்
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்சு எருஞ்சேன் .
பாசம் உள்ள வேளையிலே
காசு பணம் கூடலயே
காசு வந்த வேளையிலே
பாசம் வந்து சேரலியே .
கல்யாணம் நா செஞ்சி
கதியத்து நிக்கயில
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்து எழுதி போன பின்னே ..
அஞ்சி ஆறு வருஷம்
உன் ஆசைமுகம் பாக்காம
பிள்ளை மனம் பித்து ஆச்சு
பெத்த மனம் கல்லு ஆச்சு .
படிப்பு படிசிகிடே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டணு
கடைசில நம்பலயே ....
பாசம்
கண்ணீரு
பழைய கதை
எல்லாம் வெருசோடி போன்ன
வேதாந்தம் ஆயிடுச்சே ...
வைகயில ஊர்முழுக
வல்லுரும் சேர்ந்தழுக
கைபிடியா கூட்டி வந்து
கரசேர்த்து விட்டவளே .
எனக்கொன்னு ஆனதுன்ன
உனக்கு வேற பிள்ளை உண்டு
உனக்கு ஒன்னு ஆனதுன்ன
எனக்கு வேற தாய் இருக்கா ....................???