பாம்பன் பாலம் வரலாறு!
2025, ஏப்ரல் 6, ராமநவமி அன்று பிரதமர் மோடி பாம்பன் பாலத்தை மிகத்தாமதமாக திறந்து வைக்கிறார். 2020-25 ஐந்து வருட காலங்கள் 2கீமீ நீளம் செலவு ரூ.500 கோடி.
புதியதாக கட்டப்பட்ட பாலத்தில் குறைபாடுகள் உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு கமிசன் (CRS - Commission of Railways Safety) நிராகரிக்க , எப்படியோ சமாளித்து கட்டி முடித்திருக்கிறார்கள். 75 கிமீ வேகம் டிசைன் செய்யப்பட்ட புதிய பாலம் 50கிமீ வேகம் செல்லவே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ரயில்வே பாதுகாப்பு கமிசன், ஸ்டீல் பாலம் விதிமுறைகளை, துருப்பிடிப்பதை, கடல் அரிப்பு போன்றவைகளை, டிசைனில் சரியாக காட்டவில்லை என்கிறது. பராமரிப்பு மிகமிக அதிகமாக தேவைப்படும்.
2025- ஜனவரியில் ரயில்வே பாதுகாப்பு கமிசன், சில குறைபாடுகளைச் சுட்டிக் காண்பித்திருக்கிறது.
ரயில்வே ரிசர்ச் டிசைன் ஸ்டீல் RDSO பாலங்களின் விதிமுறைகளின்படி புதிய பாலம் கட்டப்படவில்லை. மாறாக TYPSA - SPANISH என்ற ஸ்பெயின் நாட்டுக் கம்பனியின் டிசைன் இந்தபுதிய ஸ்டீல் பாலம். இந்திய ரயில்வே போதுமான எஞ்சினியரிங் திறமைகள் இருக்கிறபோது, புதிய முறைகளில் கட்டியது தவறு. ஆனால் ஐஐடி-சென்னை இந்த வெளிநாட்டு கம்பனியின் டிசைனை ஒப்புதல் செய்ததாம்.
ஆக இந்த டிசைன் இந்திய ஐரோப்பிய கலவை. பாம்பன் பாலம் 2.05கிமீ நீளம், 22மீட்டர் செங்குத்தாக 22மீ. உயர்த்தி சிறிய கப்பல்கள் செல்ல வழிகொடுக்கிறது. ஆயுள் 100 வருடம். 1914இல் ஆங்கிலேயர் காலங்களில் பாம்பன் பாலம் கட்டப்பட்டது. சாலை ரயில்வே கேட்களைப் போன்று வடிவமைக்கப்பட்டு தூக்கப்பட்டது. ஆயுள் 100 வருடம். முடிந்துவிட்டது.
அதாவது 70 (22மீ) அடி உயரம் கப்பல் போக்குவரத்துக்களுக்காக ரயில்வே பாம்பன் பாலம் , தூக்கி இறக்கப்படுகிறது. இதற்கு இணையாக சாலைப்போக்குவரத்து பாலம் பக்கத்தில் செல்கிறதல்லவா ? எதற்கு இந்த தூக்குத்தூக்கி நாடகம் , வேண்டாத பிரச்சினைகள் ? குழப்பங்கள் ? ரயில்வேக்கு கவாச் என்ற கப்சாவுக்கே லட்சம் கோடி ரூபாய்கள் ஒதுக்கியிருக்கிறார்கள். தூக்குத்தூக்கி பாம்பன் தேவையா ? கடல் மட்டத்திலிருந்து பாலத்தின் மத்திய பகுதி உயரத்தை 70அடி வைத்து விட்டால் சாலைபாலம் போல எந்த நேரத்திலும் கப்பல், ரயில், பஸ்களை ஓட்டலாமே ?
ஜெர்மனி- Hamburg's Hattwyk Railway Bridge 2016–20.
உலகத்திலேயே முதன்முறையாக கட்டப்பட்ட செங்குத்தாக உயர்த்தப்படும் முதல் ரயில்வே பாலம். இதன் எஞ்சினீயரிங், வேலைப்பாடுகள் மிகமிக காம்ப்ளக்ஸ். மிக அதிநவீன தொழில்நுட்பம். நமக்கு தேவையில்லை. இரண்டாவது தற்போதைய பாம்பன் பாலம்.
ஜெர்மனியில் இது ஒரு தனியார் துறைமுகம் பகுதி .இங்கு சரக்கு கப்பல் போக்குவரத்துகள் மிக அதிகம். சாலைபாலம், ரயில்வே பாலம் என 2 தூக்குதூக்கி பாலங்கள். இதற்கு இணையான கவுண்டர் வெயிட்கள். ஏராளமான வயர்ரோப்புகள், மோட்டார் கன்ட்ரோல் எல்க்ட்ராணிக்ஸ், ஜெர்மனி போன்ற முன்னேறிய நாடுகளுக்கு சரி.
பாம்பன் பாலம் நீளம் 2கிமீ. இதில் 200மீ. மட்டும் உயர்த்தி இறக்குகிறார்கள். எத்தனை ரயில்கள், சரக்கு ரயில்கள் ஓடப்போகிறது. அதிகமானால் தினம் 10 ரயில்கள். சாலை போக்குவரத்து வசதி பாலத்தையும் ஜெர்மனியில் ஏற்றி இறக்குவர். ஆனால் இராமேஸ்வரம் பாம்பன் பாலம் பெரிய துறைமுகம் அல்ல. சிறிய கப்பல், படகுகள் செல்லும் பகுதிகள். வேண்டாத வேலை, பந்தா.
2023இல் 4 வழி வாகன சாலை பாலம் அமைக்க ரூ.20–30 கோடி /கிமீ செலவு ஆனது. ரயில்வே டபுள் லைன் பாலம் அமைக்க ரூ. 30–50 கோடி/கிமீ ஆனது. பாம்பன் பாலம் நீளம் வெறும் 2கிமீ. 2019 ஆண்டில் முதலில் ரூ.200 கோடி அதாவது ரூ.100 கோடி/கிமீ சிங்கிள் லைன் ஆரம்பித்து ரூ.520கோடி செலவு செய்திருக்கிறார்கள் !