Breaking News :

Saturday, January 18
.

உலகம் முழுவதும் 44 லட்சம் யூடியூப் சேனல்களுக்கு தடை.. இந்தியாவில் மட்டும் 11 லட்சம் வீடியோக்களை நீக்கியது யூடியூப்!!


இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை உலகம் முழுவதும் 44 லட்சம் யூடியூப் சேனல்களை தடை செய்து இருப்பதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. யூடியூப் நிறுவனத்தின் சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும் ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் இந்த யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள சமூக வழிகாட்டுமுறைகள் அமலாக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் உலகம் முழுவதும் 38 லட்சம் வீடியோக்களையும் இந்தியாவில் 11 லட்சம் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது. இந்தியாவிலிருந்து மட்டும் 11,75,859 வீடியோக்களை நீக்கியுள்ளதாக யூடியூப் தெரிவிக்கிறது.

இதுதான் உலகிலேயே அதிகபட்சமாம். அடுத்ததாக அமெரிக்காவிலிருந்து 3,58,134 வீடியோக்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.இவற்றில் 91 சதவீத வீடியோக்கள் யூடியூப் நிறுவனத்தின் மென்பொருள்கள் மூலம் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. ஸ்பேம் மற்றும் தவறான வீடியோக்களை பதிவிடு செய்வதால் சேனல்கள் அகற்றப்படுவதற்கு முதன்மைக் காரணமாகும், இது அனைத்து சேனல் நீக்கத்தில் 90 சதவீதம் காரணமாகும். குழந்தை பாதுகாப்பு மற்றும் வன்முறை உள்ளடக்கம் ஆகியவை முறையே 24.9% வீடியோக்களை அகற்றியுள்ளன. மேலும் 16.9% வீடியோக்களில் நிர்வாணம் இருந்ததால் அவை அகற்றப்பட்டன.
மேலும் இந்த 3 மாதங்களில் 94.3 கோடி ஸ்பேம் ரக பின்னூட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன.943 மில்லியன் கமென்ட்டுகளை யூடியூப் நீக்கியுள்ளது. அதில் 99.3 சதவிகிதம் தானியங்கி முறையில் நீக்கப்பட்டுள்ளன.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.