டுடே டாப் நியூஸ் - Today Top News - 24 October 2024

today-top-news-24-october-2024
டுடே டாப் நியூஸ் - Today Top News - 24 October 2024

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தமைக்காக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவதற்காக டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெறும் “அடுத்த தலைமுறை டிஜிட்டல் செயல் திட்டம் 2024”-ல் இந்தியாவின் பிரதிநிதியாகச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வளர்ந்து வரும் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனமான ஸ்கிராப்பிஃபை எக்கோடெக் (Scrapify Ecotech) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் திரு. ம.பி.அழகு பாண்டிய ராஜா அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் பாராட்டினார்.

தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று முதல் ஆண்டிலேயே அகில இந்திய தொழிற் தேர்வில், இந்திய அளவில் பல்வேறு தொழிற் பிரிவுகளில் முதலிடம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 மாணவ, மாணவியர்களும் மற்றும் காட்டுமன்னார் கோவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பயிற்றுநர் ஒருவரும் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களுடைய பேரனும், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமதி உமா மகேஸ்வரி அவர்களின் மகனுமான கோ.ஸ்டாலின் - யுவஸ்ரீ ஆகியோரது திருமணத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் தலைமையேற்று நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்.