கனமழை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இராயப்பேட்டையில் ஆய்வு
சென்னையில் #NEMonsoon காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, இராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக மழைநீர் வடிகின்ற விதத்தை நேரில் ஆய்வு செய்தோம்.

மேலும், கொட்டும் மழையில் நள்ளிரவிலும் மக்களுக்காக தொண்டாற்றி வருகின்ற தூய்மைப்பணியாளர்களுக்கு பால், சிற்றுண்டிகளை வழங்கி, அவர்களைப் பாராட்டினோம்.
மழைப்பொழிவை முறையாக கண்காணித்து மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். #ChennaiRains