கணவனை மகிழ்விக்க வழிகள்? (பெண்கள் மட்டும் படிக்கவும்)
உங்கள் திருமணம் இனிக்க வேண்டும் என்றால், கணவர் மனைவியை மகிழ்விக்க வேண்டும், மனைவி கணவரை மகிழ்விக்க வேண்டும்.
உங்கள் கணவரின் ஆண் மனோபாவம் உங்களிடம் இருந்து மரியாதையை எதிர்பார்க்கும். உங்கள் கணவருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை மற்றும் மதிப்பு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, உங்களை மனமார காதலிக்க வைக்கும் .
உங்கள் கணவரின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து, குடும்பத்திற்கான அவருடைய பங்களிப்பை நீங்கள் மதித்தால் உங்களை அவருக்கு மிகவும் பிடிக்கும்.
உங்கள் கணவர் உங்கள் மேல் கொள்ளை பிரியத்தோடு இருக்கலாம். அதற்காக அவர் முழு நேரமும் உங்களோடு இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க கூடாது. உங்கள் கணவருக்கு அவருக்கு பிடித்ததை செய்வதற்கு உரிய தனிமையை நீங்கள் கொடுத்தால், உங்கள் மேல் அவர் கொண்ட காதல் பன்மடங்காகும் .
உங்கள் கணவரை உசுப்பேத்துகிறேன் பேர்வழி என்று அவரை மற்றவர்களோடு ஒப்பீடு செய்தால் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. உங்கள் கணவரை யாரோடும் ஒப்பீடு செய்யாதீர்கள். யாரிடமும் அவரை விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் கணவரின் முதுகிற்கு பின்னால், அவரை விமர்ச்சிக்காதீர்கள்.
உங்கள் கணவருக்கு உங்களை போல் மனோதிடம் கிடையாது . குடும்பத்தில் பிரச்சனைகள் வந்தால் நிலைகுலைந்து போவார். அந்த நேரம் அவரை மட்டம் தட்டாமல் அவருக்கு அனுசரணையாக இருந்தால், உங்களை மிகவும் நேசிப்பார் .
உங்களை போலவே உங்கள் கணவருக்கு அவர் குடும்பத்தை மிகவும் பிடிக்கும். உங்களை போல், குடும்பத்தின் மேல் உள்ள பாசத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், நீங்கள் அவர்களை மட்டம் தட்டினால் மனம் நொந்து போவார்.
மாறாக, உங்கள் கணவரின் குடும்பத்தை நீங்கள் அனுசரித்து போனால் அவருக்கு உங்கள் மேல் உள்ள மதிப்பு அதிகரிக்கும் . பார்த்தீர்களா? உங்கள் கணவரை மகிழ்விப்பது எவ்வளவு எளிமை என்று?
உங்கள் கணவரை மகிழ்விக்க, இந்த அடிப்படைகளை பின்பற்றினால், உங்கள் இருவர் இடையே தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றாது. ஓரளவு சந்தோசத்தோடு உங்கள் குடும்ப வாழ்க்கை நடக்கும்.