வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது?

child-by-surrogate-mother
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது?

வாடகைத்தாய் மூலமாக குழந்தைபெறும் SURROGATE MOTHERHOOD முறை பல்வேறு ஆண்டுகளாக இருக்கும் சிகிச்சை முறை தான்.. தற்காலத்தில் சினிமா துறையில் உள்ளவர்கள் இந்த முறையில் பிள்ளைப்பேறு பெறுவதால் தான் அதிகம் பேசுப்பொருளாக உள்ளது..

சினிமா பிரபலங்கள் ஷாரூக்கான் , ப்ரியங்கா சோப்ரா; கரண் ஜோகர்; துஷார் கபூர் போன்றவர்கள் வாடகைத்தாய் முறையை பின்பற்றி குழந்தை பெற்ற பிறகு இவை பெரிய விஷயமானது.. அதில் சமீபத்திய வரவு நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் ஆவர்..

ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியின் மனைவி கர்ப்பப்பை வளர்ச்சிக் குறைபாடு மற்றும் நீரிழிவு உயர் ரத்த அழுத்தம் ஆகியவை உள்ளதால் வாடகைத்தாய் முறை மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டார்.. நான் சொல்வது தொண்ணூறுகளில் நடந்தது. ஐயூஐ முறையில் மருத்துவமனையில் விந்தணுவை செலுத்தி கொண்டு intrauterine insemination மூலமாக கர்ப்பம் அடைவார்கள். 1989ல் தசரதம் என்ற மோகன்லால் திரைப்படத்தில் வாடகைத்தாய் முறை மற்றும் அதன் சட்ட சிக்கல்களைத் தெளிவாக திரையாக்கி இருப்பர்..

சிலர் அவர்களுடைய விந்தணு மற்றும் கருமுட்டையை யே உபயோகம் செய்யும் உடல் நிலையில் இருப்பார்கள்..சிலருக்கு கருமுட்டை அல்லது விந்தணு இரண்டில் ஒன்று அல்லது இரண்டுமே தானம் பெறப்படும்.. அவரவர் தேவைக்கு ஏற்றது செய்யப்படும்.

ஆனால் இந்த வாடகைத்தாய் முறையில் பெரிய பிரச்சினையே அதில் ஈடுபடும் பெண்களுக்கு இடைத்தரகர்களால் போதுமான பணம் கிடைக்கப் பெறாது.. பெரும்பாலும் ஏழைப்பெண்களே இந்த வாடகைத்தாய் முறைக்கு ஈடுபட விழைவார்கள். பத்து லட்சம் பணம் கிடைக்கும் என்று வாடகைத்தாயாக சம்மதம் தெரிவித்து பின்னர் அவர்கள் கையில் கிடைப்பதே ஐந்து லட்சத்திற்கும் குறைவாக இருக்கும்.

அப்பெண்களின் குடும்ப உறுப்பினர்களும் அவர்களை தொடர்ந்து வாடகைத்தாயாக பணம் கிடைக்கிறது என்று நிர்பந்தம் செய்வது தான் கொடுமையான நிலை.

குழந்தை.. அறுவை சிகிச்சை முறையில் மட்டுமே பாதுகாப்பாக எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொண்டு பிறக்க வேண்டும்.. வாடகைத்தாய் குழந்தை பெற்ற பிறகு அதை பார்க்க உரிமையில்லை..தாய்ப்பால் கொடுக்க உரிமையில்லை. குழந்தையின் உரிமையுள்ளவர்கள் அனுமதி தந்தால் மட்டுமே அவசியமெனில் தாய்ப்பால் சாத்தியப்படும்.. சிகிச்சைக்கு முன்னரே வக்கீல் முன்னிலையில் சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் பேசி எழுதிவாங்கப்படும்..

இதில் வாடகைத்தாய் முறையை தேர்வு செய்த பெண்ணை அது நயன்தாரா வாகவே இருந்தாலும் குறைசொல்ல நமக்கு அதிகாரம் இல்லை. அவருக்கு உடல்நலனில் மனநலனில் என்ன பிரச்சினை என்று நாம் யாரும் அறிவதற்கு தேவையும் இல்லை.

தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள இயலாத பெண்ணிற்கு இவை மிகவும் அவசியமான சிகிச்சை முறையாக இருக்கிறது.. முன்னெல்லாம் குழந்தையைக் காரணம் காட்டி இரண்டு மூன்று திருமணங்கள் செய்து கொண்டிருந்த இந்த சமூகம் இப்போது வாடகைத்தாய் முறையை ஏற்றுக்கொள்வதில் கஷ்டப்படுகிறது. மேலை நாடுகளில் பல பெண்கள் தமது கருமுட்டையையும்.

ஆண்கள் தமது விந்தணுக்களையும் சேமித்து வைத்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.. அவர்கள் விரும்பும் நேரம் குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று.. இதில் சென்டிமென்ட் பேசிப் பலனில்லை.. அறிவியல் வளர்ச்சி பெரும் போது முன்னேற்றங்களை தடுப்பதற்கில்லை..

இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி ganesanmatrimony.com