தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள முதல்வர், அமைச்சர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றம்.
100 வயதை கடந்த வாக்களர்கள் எண்ணிக்கை 2.18 லட்சம்
85 வயதைக் கடந்த 82 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் - (85 வயதைக் கடந்தவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு)
82 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.
96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
18 - 19 வயதுள்ள பெண் வாக்காளர்கள் 85.3 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்
ஆண் வாக்காளர்கள் - 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் - 47.1 கோடி, மூன்றாம் பாலினம் - 48,044 பேர்
10.5 லட்சம் வாக்குச்சாவடிகள்
1.5 கோடி பணியாளர்கள்
55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
2024 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்.
18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்றும். தேர்தல் குழு முழுமையடைந்துள்ளது. எங்கள் வேலையும் முழுமையடைந்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.
தேர்தலை திருவிழா போன்று நடத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். ஒவ்வொரு தேர்தலும் சவால் நிறைந்தது தான் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.