Breaking News :

Friday, April 19
.

2024-25ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்


2024-25 ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

 

100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது.

 

நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது-பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

 

சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

 

கீழடி, வெம்பக்கோட்டை, உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல்துறை பணிகள் மேற்கொள்ளப்படும்; ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

 

அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500கோடி ஒதுக்கீடு.

 

தமிழ் இணைய மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

 

2000 கி.மீ அளவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.


 

மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

 

கிராமப் பகுதிகளில் சாலை திட்டப்பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

 

2030-க்குள் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

 

சிங்காரச் சென்னை திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு.

 

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அறிமுகம்.

 

பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை  பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.

 

5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு.

 

2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.

 

ரூ.3,500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும்.

*ரியோட்டா மீடியா தயாரிக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*

 

'இசை ஞானி' இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  

 

பாலு மகேந்திராவின் 'சினிமா பட்டறை' மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே. பி. தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார். நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப்  பற்றிய இந்த திரைப்படத்தை ரியோட்டா மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

 

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன்  எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.'' என்றார். 

 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகனும், நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களைப் பிரதிபலிப்பதால்... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.