சென்னை, காமராஜர் சாலையில் உள்ள இராணி மேரி கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 100 வேலைவாய்ப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு, சென்னையில் நடைபெறும் 100 ஆவது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஆணைகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சி. வி. கணேசன் வழங்கினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு
மனிதனை பொருளாதர ரீதியில் உயர்த்த, வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் உருவாக்கி தருவது வேலை வாய்ப்பு. திமுக ஆட்சியில் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பணிகளை வழங்கி உள்ளோம்.
இன்று 2 லட்சமாவது பணி நியமன ஆணை இங்கு வழங்கப்படுகிறது. எனவே 2 லட்சம் குடும்பத்திற்கு விளக்கேற்றிய பெருமை முதல்வர் ஸ்டாலின்க்கு சேரும்.
பின்னர் மேடையில் பேசிய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வி. கணேசன்
வேலைவாய்ப்பு முகாமை காஞ்சிபுரத்தில் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.
5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உள்ள கோவில் சொத்துகளை மீட்டு அரசிற்கு வழங்கியவர் அமைச்சர் சேகர் பாபு.
இந்தியாவில் முதன் முதலில் துவக்க பட்ட கல்லூரியில் 3 வது கல்லூரி இராணி மேரி கல்லூரி தான். இந்த கல்லூரியில் படிப்பதே மிக பெரிய பெருமை.
முதல்வர் ஸ்டாலின் உங்களுக்காக வேலைவாய்ப்பை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். நீங்கள் என்ன படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் என்ற முழு விளக்கங்கள் அந்த வலைத்தளத்தில் உள்ளது.
கலை மற்றும் அறிவியல் பாடங்கள் பயிலுவோருக்கு வேலை கிடைப்பது கடினமான ஒன்று என்பதால் தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
18 லட்சம் பேருக்கு இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
6 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து 26 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்னும் உத்தரவாதத்தை முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு மக்களுக்கு கொடுத்துள்ளார்.
இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி வேண்டும். முடியாது என்பது எதும் இல்லை. சோம்பேறி மனிதன் வெற்றி பெற முடியாது என்று. கடுமையாக உழைப்பவன் லட்சியத்தை பெற முடியும். உழையுங்கள் வெற்றி பெற முடியும்.