மகள் மீராவின் நினைவாக நடிகர் விஜய் ஆண்டனி செய்த செயல்... மனைவி உருக்கம்!.
2 மனைவிகளுடன் மாதம்பட்டி ரங்கராஜ்.. இந்திய சட்டப்படி இது சாத்தியமா?
பிரபல நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் , அவரது முதல் மனைவி ஸ்ருதி மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டிலா ஆகிய மூவரையும் சுற்றிய தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள், மீண்டும் ஒருமுறை சோஷியல் மீடியாவில் புயலை கிளப்பியுள்ளன.
கடந்த ஆண்டு ஜாய் கிரிஸ்டிலாவுடனான திருமணம் மற்றும் கர்ப்ப விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அக்குழந்தையின் முழு பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக மாதம்பட்டி ரங்கராஜ் அறிவித்து இருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ்: இந்நிலையில், நேற்று ஜாய் கிரிஸ்டிலா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் தங்களது மகன் 'ராகா'வின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அதில், ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த வண்ணமயமான பிறந்தநாள் விழாவின் புகைப்படங்களை ஜாய் கிரிஸ்டிலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இன்ஸ்டா போர்: ஜாய் கிரிஸ்டிலாவின் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான அதே நேரத்தில், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியான ஸ்ருதி ரங்கராஜ் தனது கணவருடன் உறவினர் திருமண நிகழ்ச்சி கலந்துகொண்ட குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஒரே நாளில்... காலையில் முதல் மனைவியுடன் திருமண நிகழ்ச்சி, மாலையில் இரண்டாவது மனைவியுடன் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் என காட்சிகள் அடுத்தடுத்து மாறவே, கடுப்பான நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் காரசாரமான கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
சட்டப் படி சாத்தியமா?: முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணத்தையும் பதிவு செய்யாமல் இந்திய சட்டப்படி இரண்டு குடும்பங்களுடன் வாழ்வது எப்படி சாத்தியம்? என ஒரு தரப்பினர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றொருவர் இரண்டு பெண்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் சுயமரியாதைக்கு இந்த சூழலில் என்ன மதிப்பு கொடுக்கப்படுகிறது? எனக் காட்டமாக கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
முட்டுக்கொடுக்கும் ஆதரவாளர்கள்: அதே நேரத்தில், மற்றொரு தரப்பு நெட்டிசன்கள் மாதம்பட்டி ரங்கராஜின் குடும்பத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட நபர்களின் மனங்கள் ஒத்துப்போய் அவர்களுக்குள் ஒரு தெளிவான புரிதலுடன் வாழும்போது, வெளியில் இருக்கும் மற்றவர்கள் இதில் கருத்து சொல்வதற்கு எதுவுமில்லை. ஸ்ருதி வழக்கறிஞராகவே இருந்தாலும், குடும்பம் குழந்தைகள் என்று வரும்போது சில விஷயங்களை விட்டுக்கொடுத்து போகத்தான் வேண்டும் என முட்டுக்கொடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸ்டிலா மற்றும் ஸ்ருதி ஆகிய மூவரின் இந்த விவகாரம் தற்போது இணையதளங்களில் டாப் ட்ரெண்டிங் விவாதமாக மாறி உள்ளது.