சிறையில் டார்ச்சர்.. வெறும் சப்பாத்தி மட்டுமே .. அன்பில் மகேஷ் உருக்கம்!

anbil-mages-prison-jail-news
சிறையில் டார்ச்சர்.. வெறும் சப்பாத்தி மட்டுமே .. அன்பில் மகேஷ் உருக்கம்!

புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்தார். அப்போது நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அன்பில் மகேஷ் தரப்பில் முன்வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி முதல் வகுப்பு மற்றும் சரியான உணவு வழங்கவில்லை என அன்பில் மகேஷ் தரப்பு முறையீடு செய்துள்ளது.

சோதனைக்கு வந்த போது போலீசார் யாரையும் நாங்கள் தடுக்கவில்லை என்றும் அன்பில் எங்கும் தப்பி ஓட மாட்டார் எனவும் அன்பின் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். நீதிமன்றம் கூறிய உணவும் வழங்கப்படவில்லை என்றும் தூங்கும்போது விளக்கு எரிய விடுகின்றனர் எனவும் வாதிடப்பட்டுள்ளது. மற்ற கைதிகளுக்கு வழங்கும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அதை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷுக்கு வீட்டு உணவு வழங்க வேண்டும் என்று அவரது தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் நவம்பர் 2ஆம் தேதி வரை காவல் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு கொடுத்திருந்த நிலையில் அன்பில் மகேஷ் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்படுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே விசாரணை சோதனை நடத்தப்பட்டது என்றும் காவல்துறை விசாரணையில் எதையும் மறைக்க வேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

தான் அடைக்கப்பட்டுள்ள அறையில் இரவில் மின் விளக்கு வேண்டுமென்றே எரிய விடுகிறார்கள் என்றும் மாநில நலனுக்காக தானும் தனது குடும்பமும் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தியுள்ளோம் என்றும் அன்பில் மகேஷ் உருக்கமாக தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதல் வழக்கில் கைதான அஜ்மல் கசாப்புக்கு கூட சிறை அனைத்து வசதிகளும் செய்து தந்தது என்றும் தான் எங்கும் தப்பி விட மாட்டேன் மனிதத்தன்மையுடன் நடத்துங்கள் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்தார். அப்போது நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அன்பில் மகேஷ் தரப்பில் முன்வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி முதல் வகுப்பு மற்றும் சரியான உணவு வழங்கவில்லை என அன்பில் மகேஷ் தரப்பு முறையீடு செய்துள்ளது.