மகள் மீராவின் நினைவாக நடிகர் விஜய் ஆண்டனி செய்த செயல்... மனைவி உருக்கம்!.
"5-வது மாடியில் இருந்து வீசப்பட்ட குழந்தை - அம்பலமான பகீர் உண்மை!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து தனது 2 வயது பெண் குழந்தையைக் கீழே வீசிக் கொன்றதாகத் தாயைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆரம்பத்தில் இது ஒரு சோகமான விபத்து என்று நம்பப்பட்ட நிலையில், குழந்தையின் உயரம் மற்றும் அவள் கீழே விழுந்த விதம் ஆகியவற்றைக் கொண்டு காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் இது கொடூரமான கொலை என்பது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் பூனம் என்ற அந்தத் பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தான் ஒரு குழப்பமான மனநிலையில் இருந்ததாகக் கூறியுள்ளார். கடந்த அக்டோபர் 12 அன்று ‘பி பிரிவு’ காவல் நிலைய அதிகாரிகள் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, கெஹல் என்ற அந்த இரண்டு வயது குழந்தை தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
முதற்கட்டத்தில் இது விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அக்டோபர் 15 அன்று குழந்தையின் தந்தை சஞ்சய் சக்காரியாவின் புகாரின் அடிப்படையில் குழந்தையின் தாய் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெற்றோர்கள் இருவரும் கடந்த எட்டு மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
குழந்தை தானாகவே நிலைதடுமாறி விழுந்திருந்தால் படிக்கட்டுகளில் உருண்டு சென்றிருக்கும் என்றும், மூன்று அடி உயரமுள்ள குழந்தை நான்கரை அடி உயரமுள்ள கைப்பிடி சுவரை எட்டியிருக்க முடியாது என்றும் காவல்துறை ஆய்வாளர் ஜி.ஆர்.சவுகான் தெரிவித்தார்.
மேலும், குழந்தை கட்டிடத்திற்கு அருகில் நேராக விழாமல் சற்று தள்ளி விழுந்ததால், அவள் மீது பலம் பிரயோகிக்கப்பட்டு கீழே வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றது.
குழந்தையைக் கொல்ல என்ன காரணம் என்று விசாரித்தபோது, தான் மன உளைச்சலில் இருந்ததாகத் தாய் கூறியுள்ள போதிம், காவல்துறை அதனை முழுமையாக ஏற்கவில்லை.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு முறையான உளவியல் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும், இது தொடர்பாகக் கூடுதல் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.