சென்னை டூ திருவண்ணாமலை - தினமும் நேரடி ரயில் வெறும் ₹55 மட்டுமே

chennai-to-tiruvannamalai-daily-train-just-rs-55
சென்னை டூ திருவண்ணாமலை - தினமும் நேரடி ரயில் வெறும் ₹55 மட்டுமே

வெறும் ₹55 மட்டுமே இந்த ரயில் மூலம் சென்னையில் இருந்து திருவண்ணாமலை வரை செல்வதற்கு // சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து உள்ள கட்டணம் இது!

சென்னை டூ திருவண்ணாமலையை நேரடியாக இணைக்கும் வகையில் மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது அதில் தினமும் இயங்கக்கூடிய பாசஞ்சர் ரயில் மற்றும் 2 வாரம் இருமுறை மற்றும் வாராந்திர ரயில்கள் சென்னை வழியாக சென்று திருவண்ணாமலை சென்று சேருகிறது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர் /// அவர்களுக்கான பயண தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குறிப்பிடப்பட்ட புதிய ரயில் சேவைகள் தற்போது திருவண்ணாமலை வழியாக ஒவ்வொன்றாக துவங்கப்பட்டு வருகிறது !!

இருப்பினும் பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் கேட்டு வருவது சென்னைக்கு தினசரி ரயில் சேவை மட்டுமே // இந்த பாசஞ்சர் ரயில் தினமும் இயங்கினாலும் விழுப்புரம் வழியாக ஒரு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பது இந்த மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வருகிறது // பௌர்ணமி மற்றும் விழா காலங்களில் மட்டும் விழுப்புரம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் மற்றபடி நிரந்தர சேவை இந்த வழித்தடத்தில் கிடையாது .

தற்போது சென்னையிலிருந்து தினமும் திருவண்ணாமலை செல்வதற்கு பாசஞ்சர் ரயில் வசதி மட்டும் உள்ளது // சென்னை கடற்கரை டூ திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலை டூ தாம்பரம் என இரு வேறு சேவைகளாக இயங்குகிறது


வண்டி எண் ::-- 66033 // 66034 MSB-TNM-TBM
★ சென்னை கடற்கரை >> திருவண்ணாமலை
★ திருவண்ணாமலை >> தாம்பரம்
“ MEMU பயணிகள் வண்டி ”
✓ வகை : சாதாரண // ORDINARY TRAIN
✓ சேவை : தினசரி // DAILY SERVICE
✓ பெட்டி : 12 CAR MEMU RAKE ‼️ © SIBIKUMAR