டெல்லியில் முகாமிட்டுள்ள ரஜினி மனைவி... பாஜகவின் புதிய வியூகம்...

latha-rajinikanth-delhi-bjp
டெல்லியில் முகாமிட்டுள்ள ரஜினி மனைவி... பாஜகவின் புதிய வியூகம்...

2026 சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்பு தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்பு, தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்களை பார்க்க முடிகிறது, விஜய் பார்முலாவை பின்பற்றி நடிகர் தனுஷ் அரசியல் வருகைக்கான சமிக்கையை கொடுக்கிறார், அவரை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும், நானும் யாருக்கும் சளைத்தவர் இல்லை என அரசியல் வருகைக்கான சமிக்கையை கொடுத்து இருக்கிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் மனைவியும் நடிகர் தனுஷ் மாமியாருமான லதா ரஜினிகாந்த் டெல்லியில் முகாமிட்டு பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து வருவது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது, பாஜக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோரை லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசி இருப்பதாகவும், அடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அடுத்து சந்திக்க அப்பாயிமென்ட் கேட்டுக்கு இருக்கிறார் லதா ரஜினிகாந்த் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் பாஜக, கடந்த 2016ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு இருந்து சுமார் 10 வருடங்களாக தமிழகத்தில் கால் பாதிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ஆனால் அதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே பாஜகவுக்கு கொடுத்து வருகிறது.

தமிழ்கத்தில் நேரடியாக கால் ஊன்ற முடியவில்லை என்றாலும் மறைமுகமாக கால் ஊன்ற முயற்சித்த பாஜக ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ரஜினிகாந்தை அரசியலில் இறக்கிவிட்டு பின்னால் இருந்து ரஜினிகாந்தை வைத்து 2021 சட்டசபை தேர்தலில் தமிழ்கத்தில் ரஜினிகாந்தை வைத்து ஆட்சி அமைத்து விடலாம் என பாஜக போட்ட நீண்ட நாள் திட்டம் தோல்வியை தழுவியது, ரஜினிகாந்த் தீடிரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து அடுத்தவரை நம்பி பின்னின்று அரசியல் செய்ய வேண்டாம், நேரடியாக தமிழகத்தில் பாஜகவை வளர்த்து, ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஒரு இளம் தலைவரான அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்து அரசியல் நகர்வுகளை நகர்த்தியது டெல்லி பாஜக, இந்த வியூகம் நன்றாக சென்று கொண்டிருக்க, திடீரென வியூகத்தை மாற்றி அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றியது டெல்லி பாஜக.

இதுவே பாஜவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.அடுத்து தற்பொழுது ரஜினிகாந்தை வைத்து காய்கள் நகர்த்தியது போன்று தனுஷை வைத்து கைகளை நகர்த்த தொடங்கி இருக்கிறது பாஜக என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 2029 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தனுஷை அரசியலில் இறங்கி விட்டு ஆழம் பார்க்க தொடங்கி இருக்கிறது பாஜக என்றும், அதற்கான வேலைகளை லதா ரஜினிகாந்த் மூலமாக பாஜக செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது டெல்லியில் முகாமிட்டுள்ள லதா ரஜினிகாந்த், தனக்கு ராஜசபா எம்பி பதிவு கேட்டு பாஜக தலைவர்களை சந்தித்து வருகிறாராம், பாஜக தலைவர்களோ, என்னடா தனுஷ் இப்ப தான், அதுவும் மறைமுகமாக அரசியல் என்ட்ரி கொடுத்து இருக்கிறார், இன்னும் நேரடியாக கூட அரசியலில் இறங்கவில்லை, அதற்குள் ராஜா சபா சீட் கேட்டால் எப்படி என தயங்கு கிறதாம் டெல்லி பாஜக .

அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் போன்ற பிரபலங்களுக்கு ராஜசபா சீட் கேட்டால் அது பாஜகவுக்கு எதோ ஒரு வகையில் உதவியாக இருக்கும், ஆனால் ரஜினிகாந்த் மனைவி என்பதற்காவே , எம்பி சீட் என்றால் எப்படி என குழப்பத்தில் இருக்குதாம் டெல்லி பாஜக, மேலும் லதா ரஜினிகாந்தை கழட்டிவிட்டு விட்டு நேரடியாக தனுஷை பாஜகவே தொடர்பு கொண்டு மற்ற டீலிங்கை பேசலாமா என்கிற முடிவை எடுக்க முன் வந்திருக்கிறதாம் டெல்லி பாஜக.