அதிரடி அமைச்சர் ரமேஷ் பெயரில் இணையதளம் -எந்த  புகாரையும் தெரிவிக்கலாம்!

minister-ramesh-website-for-all-the-petition-for-public-service
அதிரடி அமைச்சர் ரமேஷ் பெயரில் இணையதளம் -எந்த  புகாரையும் தெரிவிக்கலாம்!

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தனது ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் தங்களது குறைகளை எளிதாகத் தெரிவிப்பதற்காக அமைச்சர் ரமேஷ் ஒரு பிரத்யேக இணையதளத்தை அதிரடியாக அறிமுகம் செய்துள்ளார்.

பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, www.tvkramesh.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலமாக மக்கள் தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மட்டுமின்றி, பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் 9843088410 மற்றும் 8681088410 ஆகிய இரண்டு பிரத்யேக தொலைபேசி எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த எண்களைத் தொடர்பு கொண்டும் தங்களது குறைகளையும் புகார்களையும் மக்கள் தடையின்றித் தெரிவிக்கலாம் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார். ஆன்லைன் வசதிகள் தவிர, தனது அலுவலகத்திற்கு நேரில் வந்து மனுக்களை வழங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அதிரடியான அறிவிப்பு ஸ்ரீரங்கம் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆன்லைன் மற்றும் போன் மூலமாகவே தங்களது புகார்களை நேரடியாகத் தெரிவிக்கலாம் என்பதால், பொதுமக்கள் நீண்ட தூரம் அலைய வேண்டிய அவசியமில்லை. மக்களின் குறைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவை அப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.