மகள் மீராவின் நினைவாக நடிகர் விஜய் ஆண்டனி செய்த செயல்... மனைவி உருக்கம்!.
40 பயணிகளுக்காக மரணத்தோடு போராடிய ஓட்டுநர்!
காக்கிநாடாவிலிருந்து விசாகப்பட்டினம் நோக்கிப் பயணித்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தை ஓட்டுநர் சிவா இயக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
வழியில் எதிர்பாராதவிதமாக அவருக்குக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பு தாக்கியது. உடல் முழுவதும் மரத்துப்போகும் அளவுக்கு வலி வாட்டி வதைத்த அந்த வினாடியிலும், தன் பின்னால் அமர்ந்திருக்கும் 40 பயணிகளின் உயிரே அவரது நினைவில் நின்றது. மரணத்தின் விளிம்பில் நின்ற தருணத்திலும் நிலைதடுமாறாமல், தன்னுடைய முழு பலத்தையும் ஒன்றுதிரட்டி ஸ்டீயரிங் சக்கரத்தை உறுதியாகக் கைகளில் பற்றிக்கொண்டார்.
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்துக்குள்ளாகிவிடக் கூடாது என்ற ஒற்றை நோக்கில், சாதுரியமாக பிரேக்கை இயக்கி வாகனத்தை சாலையோரமாகப் பாதுகாப்பாக நிறுத்தினார். அடுத்த சில நொடிகளிலேயே அவரது உயிர் பிரிந்தது. தன் இறுதி மூச்சு வரை கடமையுணர்வையும் மனிதாபிமானத்தையும் கைவிடாமல், 40 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிவிட்டு மறைந்த ஓட்டுநர் சிவாவின் தியாகம் என்றும் போற்றத்தக்கது.