இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு  1 கோடி வெகுமதி -  Mankind pharma நிறுவனம்!

fly-dubai-indian-pilot-smit-machchhar-mankind-pharma
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு  1 கோடி வெகுமதி -  Mankind pharma நிறுவனம்!

Fly Dubai விமானத்தில் பயணித்த 180 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ரூ.1 கோடி வெகுமதி வழங்கப்படும் என Mankind Pharma நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆபத்தான சூழலில் அவர் வெளிப்படுத்திய துணிச்சல் மற்றும் நிதானத்தை பாராட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சூழலை சமாளித்து பயணிகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றுவதில் ஸ்மித் மச்சார் முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான நேரத்திலும் அவர் காட்டிய அசாதாரணமான துணிச்சல், நிதானம் மற்றும் பொறுப்புணர்வை பாராட்டும் வகையில் Mankind Pharma நிறுவனம் ரூ.1 கோடி வெகுமதியை அறிவித்துள்ளது.

இதனிடையே, சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சாரை பிரதமர் மோடி வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஆபத்தான சூழலிலும் பயணிகளின் உயிரைக் காப்பாற்ற அவர் மேற்கொண்ட நடவடிக்கையை பிரதமர் பாராட்டினார்.

ஸ்மித் மச்சாரின் வீரத்தையும், பயணிகளை பாதுகாப்பாக காப்பாற்றிய அவரது சாதுர்யமான செயலையும் பிரதமர் மோடி நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தற்போது விமானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது துணிச்சலை கவுரவிக்கும் வகையில் ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.