முழுநேர வேலை பார்த்துக்கிட்டே UPSC கனவை நனவாக்கி IAS ஆன ஷ்வேதா பாரதி!
UPSC கனவை நனவாக்க முடியுமா? முடியும் என்று நிரூபிச்சிருக்காங்க பீகாரை சேர்ந்த ஷ்வேதா பாரதி.
பீகார் மாநிலம் நாலந்தா தான் இவங்களோட சொந்த ஊர். பாகல்பூர் பொறியியல் கல்லூரியில் பட்டம் முடிச்சிட்டு, பெங்களூருவில் விப்ரோ மெண்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே இந்தியாவின் கடினமான UPSC தேர்வுக்கு தயாராகியிருக்காங்க.
தினமும் கிட்டத்தட்ட 9 மணி நேரம் அலுவலக வேலை. அந்த பரபரப்புக்கு நடுவிலும் தன் லட்சியத்தை விட்டுக்கொடுக்கல. இரவு நேரத்தை முழுக்க முழுக்க படிப்புக்காக ஒதுக்கினாங்க. சுயமாகவே படிச்சாங்க, கவனத்தை சிதறடிக்கும் சமூக வலைதளங்களில் இருந்து முற்றிலும் விலகி இருந்தாங்க. ஒரு கட்டத்தில் தன்னோட கவனம் சிதையக் கூடாது என்பதற்காக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதையே நிறுத்தியிருக்காங்க.
அந்த கடுமையான உழைப்புக்கு பலன் கிடைச்சது. ஏற்கனவே 65-வது BPSC தேர்வில் வெற்றி பெற்று, பீகார் கல்வித்துறையில் மாவட்ட திட்ட அலுவலராக பணியாற்றியவர், 2021 UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 356-வது ரேங்க் பெற்று IAS அதிகாரி ஆனார்.
இன்று பீகாரில் IAS அதிகாரியாக பணியாற்றி வரும் இவரது கதை, வேலைக்கு சென்று கொண்டே தேர்வுக்கு தயாராகும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கை.
நேர மேலாண்மை, தொடர் முயற்சி, அசைக்க முடியாத விடாமுயற்சி இருந்தால் எந்த தடையையும் தாண்டலாம் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்.