மனைவியைத் தாக்கி சித்ரவதை - DSP ஜாபர் சித்திக் சிறையிலடைப்பு.
அதிரடி அறிவிப்பு - டாஸ்மாக் கடைகள் இந்த தேதியில் செயல்படாது!
வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதியன்று காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனையொட்டி டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், கிளப் சார்ந்த பார்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழக முழுவதும் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் கீழ் தான் இந்த டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் மூலமாகத் தான் தற்போது 2000க்கும் மேற்பட்ட மது கடைகளும் அதனுடன் சேர்ந்த மதுபான பார்களும் இயக்கப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் நிறுவனம் மூலம் நான் ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. சனி, ஞாயிறு வார விடுமுறை, புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் மது விற்பனை பல கோடியை தாண்டும்.
தீபாவளி அல்லது பொங்கலுக்கு 2 முதல் 3 நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டால் 750 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடப்பது வழக்கம். அது மட்டுமில்லாமல் புத்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது இந்த விற்பனை 800 கோடியை கூட சில சமயங்களில் தாண்டி இருக்கிறது. தற்போது டாஸ்மாக் மதுபான கடைகளுடன் சேர்ந்து மது கூடங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பார்கள் மூலமும் குறிப்பிடத்தக்க வருவாய் தமிழக அரசுக்கு கிடைக்கிறது.
இது மட்டுமல்லாமல் தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள், பப்புகள் என தனியாக உள்ளன. இந்த மதுக்கடைகள் எல்லாம் வருடத்தில் சில முக்கியமான நாட்கள் மூடப்படுவது வழக்கம். அதாவது ஜனவரி 15, ஜனவரி 26, மே 1, வள்ளலார் தினம், சுதந்திர தினம், அக்டோபர் 2, மே 1 தொழிலாளர் தினம் என 8 நாட்கள் மூடப்படும். இது தவிர டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக்கடைகளுமே தேர்தல் சமயங்களில் மூடப்படும்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், கிளப் சார்ந்த பார்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட உள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான காந்தி ஜெயந்தி இந்தாண்டு அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்று DRY DAY ஆக அனுசரித்து அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் (FL, FL2, FL3/FL3A/FL3AA and FL11) ஆகிய அனைத்தும் இயங்காது. அங்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. அதையும் மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதேபோல், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், பாரில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தாலும் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மதுக்கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.