உத்தரபிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பி கலெக்டர், எஸ்.பி

uttarpradesh-brothers-motivational-story
உத்தரபிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பி கலெக்டர்!

உத்தரபிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பி கலெக்டர் மற்றும் எஸ்.பி. இந்த மாதிரி பதவில இருக்குறதே ஒரு மாஸ்தான், அதுலயும் ஒரு குடும்பத்தில் இரண்டு அதிரடி நாயகர்கள் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி அதிரடி மாவட்ட கலெக்டராகவும், அதிரடி எஸ். பியாகவும் பணியாற்றுகிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே.

இதில் மூத்தவர் அஜய் பால் சர்மா டாக்டருக்கு படித்தவர் பல் மருத்துவர். இளையவர் அமித் பால் சர்மா எம்.பி.பி.எஸ் படித்த பொது மருத்துவர். இவர்கள் தங்களது புரஃபசன்களை விட்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதி இந்த நிலையை அடைந்திருக்கின்றனர். இருவரும் பஞ்சாப் லுதியானாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். இவரது தந்தை ஆசிரியர்.

இதில் இளையவர் அமித்பால் சர்மா யுபிஎஸ்சி தேர்வில் 139வது ஆல் இந்தியா ரேங்க் பெற்று ஐபிஎஸ்க்கு தேர்வானார், ஆனால் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் மீண்டும் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் ஆனார்.

ஆனால் இதற்கு முன்பே தேர்வெழுதி வெற்றி பெற்ற மூத்தவர் அஜய்பால் சர்மா ஐ.பி.எஸ் ஆகவே பணியாற்றினார். அஜய் பால் சர்மா பல்வேறு மாவட்டங்களில் எஸ்.எஸ்.பி மற்றும் எஸ்,பியாக பெயர் பெற்றவர். 2011ல் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து வரும் இவர் மொத்தம் 139 எ*ன்**கவு*** ர் களில் மூளையாக செயல்பட்டுள்ளார் இவருக்கு ஊடகங்கள் என்*****கவு***ர் ஸ்பெசலிஸ்ட் மற்றும் சிங்கம் என பெயர் சூட்டியுள்ளன.

இளையவரான கலெக்டர் அமித் பால் சர்மா கடந்த 2025 கும்பமேளாவில் அனைத்து கூட்டங்களையும் சரி செய்து கும்பமேளாவை சிறப்பாக நடத்திய கலெக்டர் எனவும் சிறந்த நிர்வாகத்திறன் உள்ள கலெக்டர் எனவும் அறியப்படுகிறார். கலெக்டர் கும்பமேளா நடந்த பிரயாக்ராஜ் பகுதியின் ஐஏஎஸ் அதிகாரியாகவும், அண்ணன் அருகே உள்ள மாவட்டமான கவுசாம்பி மாவட்ட காவல் அதிகாரியாகவும் பணிபுரிவதால் அருகருகே அண்ணன் தம்பி அதிரடி அதிகாரிகள் பணிபுரிகிறார்கள் என்ற அடிப்படையில் இவர்களுக்கு அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.