மனைவியைத் தாக்கி சித்ரவதை - DSP ஜாபர் சித்திக் சிறையிலடைப்பு.
வைரலாகி வரும் மாற்றுத்திறனாளி இளைஞரின் பதிவு.. மிஸ் பண்ணாதீங்க!
“ஒரு மாற்றுத்திறனுடன் வளர்ந்த என்னால் எப்படி ஒரு குடும்பத்தைத் தொடங்க முடியும்? அல்லது எந்தப் பெண் என்னைத் திருமணம் செய்யத் தயாராக இருப்பாள்?” — இப்படி மற்றவர்கள் பேசுவதைக் கேட்பது எனக்கு ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு இளைஞரின் பதிவு இதோ….
எனக்கு 9 வயதாக இருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சார கம்பியைத் தொட்டதால் எனது இரண்டு கைகளையும் இழந்தேன்.
ஆனால், என்னுடைய விதியைப் பற்றி மற்றவர்கள் தீர்மானிப்பதைக் கேட்பது, அந்த விபத்தைவிட மிகப்பெரிய வலியாக இருந்தது. ஆனால், சிவாங்கி என் வாழ்க்கைக்குள் வந்த பிறகு அந்த வலிகள் அனைத்தும் முடிவுக்கு வந்தன!
நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படித்தோம். வகுப்புத் தலைவராக இருந்த நான், முதல் நாளே எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த அவளிடம், வாட்ஸ்அப் குழுவில் சேர்ப்பதற்காக அவளுடைய மொபைல் எண்ணைக் கேட்டு ஒரு சிறிய காகிதத் துண்டை கொடுத்தேன்.
முதலில் அவள் ஆச்சரியப்பட்டாலும், பின்னர் நாங்கள் நல்ல நண்பர்களானோம். நாளடைவில், ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய முடியாத அளவுக்கு எங்கள் நட்பு நெருக்கமானது.