இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டுக்கு அவ்வளவு பணமா?” - தவெக எம்.எல்.ஏ.

jallikattu-tn-assembly-tvk-mla
இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டுக்கு அவ்வளவு பணமா?” - தவெக எம்.எல்.ஏ.

இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேவையில்லை என சட்டப்பேரவையில் சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ கருப்பையா பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2014ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. 2017 ஆம் ஆண்டு இளைஞர்கள் திரண்டு மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை சென்னை மெரினா கடற்கரையில் நடத்தினர். இந்த மக்கள் திரட்சி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் நிலை உருவானது.

அதைத்தொடர்ந்து, கடந்த திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உலகின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கத்தை அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024 ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.

இந்நிலையில் தான் இன்று சட்டசபையில் பேசிய சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையா, "சோழவந்தானில் அரசு கல்லூரி வேண்டும், ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும். சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும். சோழவந்தான் தொகுதியில் உள்ள அத்தனை கண்மாய்களையும் தூர்வார வேண்டும்.

இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேவையில்லை" என சட்டப்பேரவையில் சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ கருப்பையா பேசினார். இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு என அவர் பேசியதற்கு அருகில் இருந்த எம்.எல்.ஏ, அதிருப்தி ரியாக்‌ஷன் கொடுத்தார்.