இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
ஆதவ் அர்ஜுனா பேசினாலே.. சட்டமன்றம் சண்ட மன்றமாக மாறுகிறது - பிரேமலதா
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை சட்டசபை அமைதியாக செல்வதாகவும், அவர் பேசிய பின் சண்டையாக இருப்பதாக தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். இது சட்டமன்றம், சண்ட மன்றம் கிடையாது என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், சண்டையால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும் சாடியுள்ளார்.
சட்டசபையில் சமூகநீதித் துறை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இன்றும் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு திமுக எந்த நலத்திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். அதற்கு திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின், சிவி கணேசன், கே.என்.நேரு, கோவி.செழியன் உள்ளிட்ட பலரும் பதிலடி கொடுத்தனர்.
இதன்பின் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இன்று நாம் பேசுவது மானியக் கோரிக்கை. அவைத் தலைவரே நா உங்களை கெஞ்சி கேட்கிறேன். நாங்களும் 10 நாட்களாக பொறுமையாக பார்த்து கொண்டிருக்கிறோம். மானியக் கோரிக்கையை தவிர்த்து மற்ற எல்லா நிகழ்ச்சிகளும் இங்கு நடக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று கிடையாது.
பொதுவான எம்எல்ஏ-வாக பேசுகிறேன். மக்களுக்காக பேசுவதற்கு தான் சட்டசபை.. உங்களின் கருத்துக்களை ஒரு 5 நிமிடங்கள் சொல்லலாம். ஆனால் தினமும் சட்டசபை 6.30 மணி வரை சட்டசபை செல்வதற்கான காரணம், ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லி கொண்டே இருப்பதுதான். சண்டை போட்டு கொண்டே இருக்கிறோம். இதனால் மக்களுக்கு என்ன பலன்?
தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த அனைவரும் சிறப்பாகவே ஆட்சி செய்திருக்கிறார்கள். யாருமே குறை சொல்ல முடியாது. இன்று உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டிற்கு நல்லது செய்ய முயற்சி எடுங்கள்.. மாணவர்கள் தேர்வுக்கு கூட இப்படி தயாராகி இருக்க மாட்டார்கள். நாங்கள் பகலிரவு பார்க்காமல் தயாராகி வருகிறோம்.
ஆனால் சட்டசபையில் வாய்ப்பே கிடைப்பதில்லை. எப்போ பார்த்தாலும் சண்டை.. சண்டை.. சண்டை.. வாக்குவாதம் என்பது ஒரு அளவிற்கு தான் இருக்க வேண்டும். கடந்த 4 நாட்களாக சட்டசபையில் சண்டையாக செல்வதால், மக்கள் ரசிப்பதில்லை. 2 நாட்களுக்கு முன் 6 மானியக் கோரிக்கை விவாதம் நடக்க இருந்தது. ஆனால் மாலை 4 மணி வரை 2 கூட பேச முடியவில்லை.
பேசுகிறவர்களே தான் பேசுகிறார்கள். சண்டை போடுகிறவர்களே தான் சண்டை போடுகிறார்கள். சண்டை பற்றி பேசுவதற்கா இங்கு வந்துள்ளோம். கடந்த ஒரு வாரமாக நான் எதுவும் பேசவில்லை. சட்டமன்றம் இது.. சண்டமன்றம் கிடையாது.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை அமைதியாக செல்கிறது. அவர் பேசத் தொடங்கினால் சண்டையாக மாறுகிறது என்று தெரிவித்துள்ளார்.