சட்டசபையில் திடீரென இடத்தை மாற்றிய முதல்வர் விஜய்!

tn-assembly-cm-vijay
சட்டசபையில் திடீரென இடத்தை மாற்றிய முதல்வர் விஜய்!

சட்டசபை நிகழ்வுகளில் இன்று காலை முதல் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதால் அவைக்கு வராத முதல்வர் விஜய், பிற்பகலுக்கு மேல் வந்தார். அவையில் அமர்ந்து இருந்த முதல்வர் விஜய் வழக்கமாக தான், அமரும் முதல்வருக்கான பிரத்யேக இருக்கையில் அமராமல், அமைச்சர்களுடன் அமைச்சர்களாக அமர்ந்து இருந்தார். செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா அருகே அமர்ந்து இருந்த விஜய், இருவருடனும் அவ்வப்போது ஆலோசனையும் மேற்கொண்டார்.

தமிழக சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை மற்றும் சிறுபான்மை நலத்துறை ஆகிய துறைகளுக்கான மானிய கோரிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாத்தில் அமைச்சர்கள் வன்னி அரசு மற்றும் ஷாஜஹான் ஆகியோர் பதிலளித்து பேசினர். சட்டசபையில் இன்று வழக்கம் போல காலை 9.30 மணிக்கு வருகை தந்தார்.

பெரும்பாலான நாட்களில் சட்டசபைக்கு காலையிலே முதல்வர் விஜய் வந்து விடுவது வழக்கம். ஆனால் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி, காவலர்கள் குடியிருப்புகளுக்கான கட்டிடங்கள் திறப்பு நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் பங்கேற்றதால் முதல்வர் விஜய் அவைக்கு வரவில்லை.

தொடர்ந்து நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அங்கு சிக்கியிருக்க கூடிய தமிழர்களை மீட்கும் பணி தொடர்பாக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு பிற்பகலில்தான் முதல்வர் விஜய் அவைக்கு வந்தார். வழக்கமாக சட்டசபையில் முதல்வர்களுக்கு தனி இருக்கை வழங்கப்பட்டு இருக்கும். அமைச்சர்களுக்கான இருக்கையில் இருந்து சற்று விலகி இந்த இருக்கை இருக்கும்.

அதில்தான் முதல்வர்கள் அமர்வது வழக்கம். விஜய்யும் முதல் நாளில் இருந்தே இந்த முறையைத்தான் கடைப்பிடித்து வந்தார். ஆனால் இன்று அவைக்கு வந்த முதல்வர் விஜய், அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் அமர்ந்தது சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே வியப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகே முதல்வர் விஜய் அமர்ந்து இருந்தார்.