இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டம் விரிவாக்கம் - . முதல்வர் விஜய் அறிவிப்பு
அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வெற்றிப் பயணத் திட்டம் அக்டோபா் 2 ஆம் தேதி முதல், டீலக்ஸ், எல்.எஸ்.எஸ் பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம். மகளிருக்கான பேருந்து பயணத்திற்கு வருமான உச்சவரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு அனைத்து நகர பேருந்துகளிலும் இலவச பயணத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று அறிவித்தது. தற்போது வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தவெகவின் இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்திருந்தது.
இந்நிலையில், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், மகளிர் வெற்றிப் பயணத் திட்டம் என்ற பெயரில் அக்டோபர் 2 முதல் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எல்எஸ்எஸ், டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலும் கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்படும், மாவட்டங்களுக்கு இடையே சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம் செய்யலாம் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூபாய் 6,000 கோடி செலவினம் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வருமான உச்சவரம்போ அல்லது மேற்கொள்ளப்படும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருநங்கைகளும் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறிப்பிட்ட வகை பேருந்துகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த கட்டணமில்லா பயண வசதி, மேலும் சில பேருந்து வகைகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளிலும், புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.