முந்தைய ஆட்சியை விட பிசினஸ் ரொம்ப ஈஸி - தவெக அரசை பாராட்டிய G-Square!

g-square-business-tvk-tn-cm-vijay
முந்தைய ஆட்சியை விட பிசினஸ் ரொம்ப ஈஸி - தவெக அரசை பாராட்டிய G-Square!

தவெக ஆட்சியில் முந்தைய காலங்களை விட தற்போது வணிகம் செய்வது மிகவும் எளிதாகியுள்ளதாக தமிழக ரியல் எஸ்டேட் மற்றும் நில மேம்பாட்டுத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜூனைத் பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரியஸ் எஸ்டேட், கட்டுமானத் துறையை பொருத்தமட்டில் ஒரு திட்டத்தை தொடங்குவதற்கு தேவையான நில பயன்பாட்டு அனுமதி, திட்ட அனுமதி மற்றும் பல்வேறு அரசு துறைகளின் சான்றிதழ்களைப் பெறுவது மிகவும் சவாலான காரியமாக இருந்து வந்தது.

ஆனால் தற்போதைய ஆட்சியில் அவை எல்லாம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜூனைத் பாபு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான அனுமதியும் ஒப்புதல்களும் முந்தைய காலங்களை விட மிக விரைவாக கிடைக்கத் தொடங்கியுள்ளன.

அனுமதி கோரிய குறுகிய காலத்திலேயே கிடைத்துவிடுகின்றன. அரசின் விரைவான நடவடிக்கைகளால் கட்டுமான திட்டங்களை உரிய நேரத்தில் தொடங்கி முடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் எளிதாக வணிகம் செய்யும் நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

மனைப் பிரிவுகளை மேம்படுத்துவதற்கு இருந்த தேவையற்ற தடைகள் போக்கப்பட்டுள்ளன. இது போன்று தற்போதைய அரசின் விரைவான ஒப்புதல்கள் காரணமாக மாநிலத்தின் ரியல் எஸ்டேட் சந்தையில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கும் சூழல் அமைந்துள்ளது.

எல்லா அனுமதிகளும் எளிதில் கிடைப்பதால் வீடு வாங்குவோரும் நம்பிக்கையுடன் வாங்குகிறார்கள். பொருளாதார ரீதியாக எந்த நெருக்கடியையும் அவர்கள் சந்திக்கும் நிலை ஏற்படவில்லை. எனவே அரசு ஒப்புதல்கள் எளிதாக்கப்பட்டுள்ளதால் பொருளாதார வளர்ச்சியை மேலும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என ஜூனைத் பாபு தெரிவித்துள்ளார்.