இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
எடப்பாடியால் தான் சிவி சண்முகமே வெற்றி பெற்றார் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என சிவி சண்முகத்திற்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதில் தெரிவித்துள்ளார்.
மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்திய போது சிவி சண்முகம் ஏன் வரவில்லை எனவும், 1996 ஆம் ஆண்டும் அம்மா இருந்த போது 4 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது, ஆனால் மீண்டு வரவில்லையா? எனவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.
மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவல் நீக்கப்பட்டவர் தான் சிவி சண்முகம். அவருக்கு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் வாய்ப்பளித்தார். எடப்பாடியால் தான் சிவி சண்முகம் வெற்றி பெற்றார்.
திமுகவுடன் அதிமுக பேசவில்லை என சத்தியம் செய்ய முடியும். விழுப்புரத்தில் சிவி சண்முகம் முன்பு தோல்வியை தழுவ என்ன காரணம்? என அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.