பெண்களுக்கு இலவச 100 தையல் இயந்திரங்களை வழங்கினார் டாக்டர் லீமா ரோஸ் மார்டின்!
பெண்களின் சுயதொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், தையல் தொழிலில் ஆர்வமுள்ள 100 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று 08/08/2026 லால்குடியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக லால்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார். பெண்கள் தங்களது திறமையை பயன்படுத்தி சுயமாக தொழில் தொடங்கி, குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு இந்த உதவி ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும்.
பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என டாக்டர் லீமா ரோஸ் மார்டின் உறுதியளித்தார்.