இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!
காசோலை மோசடி வழக்கில், நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சரத்குமார் கடன்களை அடைப்பதற்காக, சென்னையை சேர்ந்த ஶ்ரீகிருஷ்ணா என்பவரிடம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 2 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் நடிகர் சரத்குமார் வழங்கிய காசோலை, வங்கியில் பணம் இல்லாததால் திரும்ப வந்துள்ளது.
இதையடுத்து, நடிகர் சரத்குமாருக்கு எதிராக ஸ்ரீகிருஷ்ணா, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், காசோலை மோசடி வழக்குத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி நடிகர் சரத்குமாருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.