காவிரி இணைப்பு வந்தால்… ரூபாய் 1 கோடி தருவார்: லதா ரஜினிகாந்த்!!

kavery-river-latha-rajinikanth
காவிரி இணைப்பு வந்தால்… ரூபாய் 1 கோடி தருவார்: லதா ரஜினிகாந்த்!!

‘மக்கள் மேடை’ அமைப்பின் புதிய இணையதள தொடக்க விழாவில், லதா ரஜினிகாந்த் பல முக்கிய கருத்துகளை பகிர்ந்தார். சமூக நல சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த தளம் தொடங்கப்பட்டதாகவும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கும் பயன்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும், நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் சேவைக்கு முழு ஆதரவும் ஆசீர்வாதமும் அளித்து வருகிறார் என்றார். “ஆதரவைக் காட்டிலும் ஆசீர்வாதமே எங்களுக்கு முக்கியம். கடந்த 2002ஆம் ஆண்டு காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் ₹1 கோடி வழங்குவதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். அது எந்த நேரத்தில் செயல்படுத்தப்படுகிறதோ, அப்போது அவர் கண்டிப்பாக தனது வாக்குறுதியை நிறைவேற்றுவார்,” என லதா கூறினார்.

‘மக்கள் மேடை’ அமைப்பு கடந்த பல ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருவதாகவும், விவசாயிகள் நலன் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். புதிய இணையதளம் மூலம் சமூக திட்டங்களை ஒருங்கிணைத்து அதிகமான மக்களை சென்றடைய முடியும் என்றார்.

மேலும், இந்த தளம் பொதுமக்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஒரு தளமாகவும் செயல்படும் என விளக்கினார். “மக்கள் பிரச்சனைதான் அரசாங்கத்தின் பிரச்சனை. தேவையான நேரத்தில் அந்த குறைகளை அரசிடம் கொண்டு செல்வோம்,” என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.