ரகுபதி பேச்சுக்கு சிரிக்க முடியாமல் தவித்த விஜய்!

tamilnadu-budget-cm-vijay-dmk-ragupathy-speech
ஓட்டு போடும் போது சின்ன பிள்ளைங்க புகுந்து.. ரகுபதி பேச்சுக்கு சிரிக்க முடியாமல் தவித்த விஜய்!

மக்கள் இதயங்களில் எங்கள் தலைவர் உள்ளார். ஆனால் ஓட்டும் போடும் போது சின்ன குழந்தைகள் குறுக்கில் புகுந்துவிட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ரகுபதி பேச பேச முதல்வர் விஜய் சிரிப்பை அடக்க முடியாமல் வாய் மீது கை வைத்துக் கொண்டே ஸ்மைல் செய்தார்.

தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரியவில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான ரகுபதி பேசுகையில் எங்கள் தலைவர் எங்கே இருக்கிறார் என கேட்டவர்களுக்கு அதில் சொல்கிறேன்.

மகளிர் உரிமை வாங்கும் ஒவ்வொரு பெண்களின் உள்ளத்திலும் எங்கள் தலைவர் இருக்கிறார்கள். விடியல் பயணத் திட்டத்தில் இருக்கிறார். விடியலை நீக்கி விட்டீர்கள், ஆனால் விடியல் எங்களால் மீண்டும் கிடைக்கும். நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் , அரைகுறையாகத்தான் இருக்கிறது. முழுமை பெறவில்லை.

அண்ணனின் சீர் திட்டத்தை தவெக அரசால் செயல்படுத்த முடியாது. அண்ணனின் சீர் திட்டத்தை செயல்படுத்த 2000 கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால் நீங்கள் அந்த திட்டத்திற்கு வெறும் 812 கோடி ரூபாய்தான் ஒதுக்கியுள்ளீர்கள்.

எங்கள் தலைவர் எங்கே என கேட்டார் முதல்வர். எங்கள் தலைவர் மகளிர் உரிமைத் தொகை பெற்ற சகோதரிகளின் இதயத்தில் இருப்பார். பெண்கள் விடியல் பயணத் திட்டத்தில் இருப்பார், புதுமைபு் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் இருப்பார் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து குறுக்கிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன், "ஸ்டாலின் எங்கெல்லாம் இருப்பார் என கூறினார்கள். தமிழகத்தில் ஒவ்வொருவரின் தலையிலும் 1.28 லட்சம் ரூபாய் கடனை விட்டுச் சென்றுள்ளீர்கள்" என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கே.என்.தெரு, "நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 20 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளீர்கள், எவ்வளவு கடன் என்பது அல்ல, எவ்வளவு வளர்ச்சி திட்டம் செய்யப்பட்டுள்ளது என்பதை தான் பார்க்க வேண்டும்.

60 நாட்களில் 21 ஆயிரம் கோடி கடன் வந்துள்ளது. அரசு முன்னேற்றத்திற்காகதான் கடன் வாங்குகிறது. எவ்வளவு கடன் வாங்கியுள்ளோம் என்பதை தான் பார்க்க வேண்டும். 60 நாட்களில் 21 ஆயிரம் கோடி கடன் வந்துள்ளது. அரசு முன்னேற்றத்திற்காக தான் கடன் வாங்குகிறது.

எவ்வளவு கடன் வாங்கியுள்ளோம் என்பதை பார்க்காதீர்கள். எவ்வளவு திட்டங்கள் செய்திருக்கிறோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து ரகுபதி பேசுகையில், நாங்கள் செயல்படுத்திய திட்டங்களில் எங்கள் தலைவர் இருக்கிறார். ஆனால் ஓட்டு போடும் போது சின்னபிள்ளைங்க குறுக்கால புகுந்து அவர்களுக்கு எங்கள் திட்டங்கள் தெரிந்திருக்காது என ரகுபதி சொன்ன போது விஜய் சிரித்துக் கொண்டே இருந்தார்.