இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
விளையாட்டு வீரர்களுக்கு ஜாக்பாட் - தமிழக பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு
தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தவெக அறிவித்த பல்வேறு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படுவதற்காக ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களாகிவிட்டன. அரை நூற்றாண்டு திராவிட அரசியல் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலில் தவெக அரசு நிறைய வாக்குறுதிகளை கொடுத்தனர். மகளிர் உரிமை தொகையை 2,500 ஆக உயர்த்துவோம், வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்குவோம், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி, அண்ணன் சீர் வரிசை, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகக்கு ரூ.4,000 உதவி தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்க பெண் பாதுகாப்பு படை ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன. தாய்மாமன் தங்க மோதிர திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களை தவெக ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். தவெகவின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
முன்னதாக திமுக ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் சட்டமன்றம் கூடியது. அதனை தொடர்ந்து நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.
எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ. 560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படுவதற்காக ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டில் ஆர்வம் கொண்ட 8 முதல் 18 வயதிற்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இதற்காக ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.