பட்ஜெட்டில் சென்னைக்கு இத்தனை திட்டங்களா?

tamilnadu-budget-vadapalani-metro
பட்ஜெட்டில் சென்னைக்கு இத்தனை திட்டங்களா?

2026- 2027ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் சென்னைக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை நிதியமைச்சர் மரியவில்சன் அறிவித்துள்ளார்.

2026- 2027ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் மரியவில்சன் வாசித்தார். அவர் கூறியிருப்பதாவது: உலக தரத்தில் உருவாகும் சென்னை திட்டத்திற்கு ரூ 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அம்பத்தூர், கிண்டி தொழிற்பேட்டை சாலைகள் மறுவடிவமைப்பு செய்ப்படும். சென்னை புதிய 1000 ஏசி மின்சார பஸ்கள் ரூ 500 கோடியில் கொள்முதல் செய்யப்படும். வடபழனி- போரூர் இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். சென்னைக்கு 3 புதிய மெட்ரோ ரயில் தடங்கள் பரிந்துரை செய்யப்படும்.

பசுமை மற்றும் மக்கள் மைய பொது இடங்கள் உருவாக்கப்படும். 20 இடங்களில் திறன்மிகு வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும். நடைபாதைகள், தெருக்கள் மற்றும் நகர்ப்புற போக்குவரத்து மறுசீரமைப்பு செய்யப்படும்.

ரூ 3108 கோடியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து குடிநீர் ஆதாரங்களும் ஒருங்கிணைக்கப்படும், 2030- 31 ஆம் ஆண்டுக்குள் சென்னை முழுவதும் சமமான தடையற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

அனைத்து மாநகராட்சிகளிலும் வீதிகள் மேம்பாடு செய்யப்படும். நவீன எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்படும். பள்ளிகளுக்கு பாதுகாப்பாக செல்வதற்கான பாதைகளும் ஏற்படுத்தப்படும்.
கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் உலகத் தரத்தில் மறுசீரமைப்பு செய்யப்படும். விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் செய்து தரப்பும். சென்னையின் புதிய அடையாளமாக கூவம் மற்றும் அடையாறு மாற்றியமைக்கப்படும்.

திறன் பயிற்சி மற்றும் சுயதொழிலுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும். 5 மாவட்டங்களில் "அரண்" தங்குமிடங்கள் அமைக்கப்படும். ரூ 50 ஆயிரம் வரை சுயதொழில் வங்கிக் கடனுக்கு மானியம் அளிக்கப்படும். 15 மாவட்டங்களில் குறுகிய கால தங்குமிட வசதிகள் செய்து தரப்படும்.

தாய் கேர் என்ற திட்டத்திற்கு ரூ 23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் கருவுற்ர பெண்களுக்கான சேவை, உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும். மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன் பெறலாம்.

கட்டணமில்லாமல் உணவு, மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். "மையம்- கிளை" தொலைமருத்துவ வலையமைப்பு ஏற்படுத்தப்படும். நிபுணத்துவ மருத்துவர்களை கொண்ட 5 மையங்கள், 200 கிளை மருத்துவமனைகள், அடுத்த 5 ஆண்டுகளில் 1000 மையங்களாக விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ 33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு மரியவில்சன் தெரிவித்துள்ளார்.